( பூண்டுலோயாவிலிருந்து  வி.ரி.சகாதேவராஜா)

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது  சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று  (19) ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது .

பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில்,  வித்தியாலய அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் மிகவும் சிறப்பாக வரலாற்றில் முதல் தடவையாக ஒஸ்கார் நிறுவிய சுவாமி சிலை முன்றலில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்காரின்) முன்னாள் தலைவர் கந்தசாமி பத்மநாதன் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்து கலந்து சிறப்பித்தார். அவரது பாரியார் திருமதி ராஜேஸ் பத்மநாதனும் கலந்து சிறப்பித்தார்.

அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்காரின்) முன்னாள் தலைவர் கந்தசாமி பத்மநாதன் முன்னெடுப்பில், கடந்த  (07.02.2026) அன்று வரலாற்றில் முதல் தடவையாக அங்கு சுவாமிகளின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அங்கு நிறுவப்பட்ட சுவாமி விபுலானந்தரின் சிலை முன்றலில் முதல்தடவையாக 79 வது  சிரார்த்த தின விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 பாடசாலை மாணவர்கள்  சுவாமிகளின் “வெள்ளைநிற மல்லிகையோ.. “என்ற பாடலை பாடியதுடன், மாணவி  சுவாமி விபுலாநந்தர் தொடர்பான சிறப்பு பேச்சையும் பேசினர் .

நட்சத்திர அதிதி ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரிசகாதேவராஜா சுவாமிகள் தொடர்பான சிறப்புரை நிகழ்த்தினார் .

கௌரவ அதிதியாக லண்டனில் இருந்து வந்து கலந்து சிறப்பித்த உதயன் பாஸ்கரன்( காரைதீவு)ஒரு தொகுதி நலிவுற்ற மக்களுக்கு, சொந்த செலவில் வஸ்திர தானம் செய்துவைத்தார்.

சிலை நிறுவி, வஸ்திரங்கள் வழங்கி ,அன்னதானமளித்து பாரிய சேவைசெய்த பிரதம அதிதியான அவுஸ்திரேலியா காரைதீவு  மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்காரின்) முன்னாள் தலைவர் கந்தசாமி பத்மநாதனுக்கு, அதிபர் ரவீந்திரன் நட்சத்திர அதிதி சகாதேவராஜா முன்னிலையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

சிறப்பு அதிதிகளாக காரைதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் உ.தேவதாஸ், சமூக செயற்பாட்டாளர் த.கிரிஷானந்த் ஆகியோரு கலந்து கொண்டனர்.

முன்னதாக சுவாமிகளின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மங்கல விளக்கேற்றி புஷ்பாஞ்சலியும்  செலுத்தப்பட்டது .

மலையக வரலாற்றில் பூண்டுலோயாவில் இவ் விழா  முதல் தடவையாக  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.