செல்லையா பேரின்பராசா. 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச கூட்டுறவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் 01.07.2026  புதன்கிழமை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது.

இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. உதயகுமார்

 அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 மேற்படி நிகழ்வுகளை இரண்டாம் வருட  விஞ்ஞான கல்விநெறி ஆசிரிய மாணவன்  எ.எம்.சராப்தீன் முன்னிலைப்படுத்தினார்.

எளிய மனிதர்களின் ஆயுதம் கூட்டுறவு என்னும் காணொளி –  ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜனால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

கூட்டுறவும் நாட்டுறவும் என்ற விசேட உரையினை வர்த்தக கல்விநெறி ஆசிரிய மாணவன் எம் எஸ் ஹீபத்துல்லா ஆற்றினார்.

அதிதி அறிமுக உரையினை சிரேஷ்ட விரிவுரையாளர் சைவப்புலவர் கா. கமலநாதன் நிகழ்த்தினார்.

இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.

அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

சர்வதேச கூட்டுறவு தினம் ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமை அனுட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.