இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கான உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் தொனிப்பொருள் என்பன உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

“இலங்கையை கட்டியெழுப்புவோம் ” எனும் கருப்பொருளின் கீழ் இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முற்பகல், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளுக்காகக் காவல்துறையினர் விசேட பாதுகாப்புத் திட்டங்களை வகுத்துள்ளதோடு, போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் விரைவில் அறிவிக்கவுள்ளனர்.