கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சி ), 2026 பெப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியை, இலங்கையின் நம்பகரமானதும் முன்னணி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒன்றான Evolution Events & Exhibitions நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக பாரிய அளவிலான கண்காட்சிகளை நடத்திய, அனுபவம் கொண்ட நிறுவனம் இதுவாகும்.
BITF 2026 என்பது ஒரு சாதாரண வர்த்தக கண்காட்சி அல்ல. இது, பாரிய நிறுவனங்கள், சிற்றளவு மற்றும் நடுத்தர தொழில்கள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்து, நேரடியாக தொடர்பு கொள்ளும் ஒரு முழுமையான தளமாகும்.இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கங்கள்: கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் தொழில்முனைவோரை ஆதரித்தல், மற்றும் தேசிய நிறுவனங்களுடன் பிராந்திய சந்தையை இணைப்பதாகும்.
