ஆபாச படம் காண்பித்து   சிறுமி  பாலியல் துஷ்பிரயோகம்-தலைமறைவாகி இருந்த 36 வயதுடைய சந்தேக நபர் கைது

பாறுக் ஷிஹான்

ஆபாச படம் காண்பித்து சிறுமியை கூட்டு   பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில்  சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.இந்த கைது நடவடிக்கையானது கடந்த புதன்கிழமை (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

2025-12-11 அன்று குறித்த சம்பவத்தின் எதிரொலியாக 12 வயது மதிக்கத்தக்க   தனது சொந்த மகளை கூட்டு பாலியல்  வன்புணர்வு செய்த   தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தலைமைறைவாகிய  3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த சம்பவத்துடனான  வழக்கு  சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  முன்னிலையில் கடந்த  தவணை நடைபெற்ற போது   விளக்கமறியலில் வைக்கப்பட்ட  தந்தை தவிர ஏனைய 4 சந்தேக நபர்கள்    ஒரு சந்தர்ப்பத்தில் அடையாள அணி வகுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது பாதிக்கப்பட்ட   சிறுமி   4 சந்தேக நபர்களையும்   அடையாள அணிவகுப்பில் சரியாக இனங்காட்டினார். பின்னர்    குறித்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமியின் பாதுகாப்பு கருதி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக   எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

மேலும் கூட்டு   பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் இறுதியாக வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைதான சந்தேக நபர் கல்முனைகுடி பகுதியை பிறப்பிடமாகவும்  அக்கரைப்பற்று பகுதியை  வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர்  என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.இச்சந்தேக நபர் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர்  இன்று  உரு  மறைக்கப்பட்ட நிலையில்   சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போது அச்சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 2 ஆந் திகதி   அடையாள அணி வகுப்பிற்கு   உட்படுத்த பணிப்புரை விடுத்த நீதிவான்  வழக்கினை மறு தவனைக்கு ஒத்தி வைத்தார்.

அத்துடன்  முறைப்பாட்டுக்காரரான 12 வயது மதிக்கத்தக்க  சிறுமியினால் கூறப்பட்ட பெயர்கள் யாவும் சந்தேக நபர்களின் பட்டப் பெயர்கள் ஊர்களில் அழைக்கப்படுகின்ற பெயர்கள்  ஆகையினால் தான் எஞ்சிய சந்தேக நபர்களை  கைது செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இருந்தும் பல  சிரமங்களுக்கு மத்தியில் எஞ்சிய சந்தேக நபர்களை பல்வேறு தரவுகளை பெற்று  கைது செய்வதில்   பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான்  தெரிவித்தார்.

இக்கைது நடவடிக்கையின் போது அக்கரைப்பற்று   பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண ஆலோசனைக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில்  பெருங்குற்றப் பிரிவு   பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸ் குழு பல்வேறு தரவுகளை சேகரித்து வைத்து எஞ்சிய 2 சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர்  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்  1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று   வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார்  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு   அதிகாரிகளிடம்  சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட  சிறுமியை நிந்தவூர் பொலிஸ்  நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக  அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த  சிறுமி கூறியுள்ளார்.

இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக  12 வயது மதிக்கத்தக்க தனது மகளை  முதலில் ஆபாச படம் பார்த்து வன்புணர்வு  செய்த தந்தை பின்னர் சம காலத்தில்  ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்து வந்தமையும்  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2025-12-11 அன்று  தந்தை உட்பட 5 பேரை கைது செய்த பொலிஸார்  தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேக நபர்களை   தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் அச்சிறுமியிடம் இருந்து  பெறப்பட்ட தகவலின்படி  முதலில் தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர் சாய்ந்தமருது மாளிகைக்காடு  சம்மாந்துறைப்  பகுதியில் அச்சிறுமியை  பணத்திற்கு வாங்கி வன்புணர்ந்த   04 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் 52 , 41, 24, 40 , வயதிற்குட்பட்ட  பலதார திருமணம் செய்த  சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர்.

மேலும் தந்தை தனது மகளை  சுமார் 05 மாத காலமாக பல்வேறு நபர்களுக்கு விற்று வந்ததாக  பொலிஸ்  ஆரம்ப கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.இது தவிர இச்சம்பவத்தில் தலைமறைவான ஏனைய மூன்று சந்தேக நபர்களையும்  கைது செய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலில்    அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின் மேற்பார்வையின் கீழ்  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில்  பெருங்குற்றப் பிரிவு   பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸ் குழு  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி  தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள்  இணைந்து குறித்த  கைது   நடவடிக்கை  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

விபச்சாரம் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பகுதியில் வசித்து வந்த ஐவர் கொண்ட இக்குடும்பம் பொருளாதார நிலைமை காரணமாக அவ்விடத்தில் இருந்து குடிபெயர்ந்து அருகில் உள்ள மற்றுமொரு ஊரான  நிந்தவூர் பகுதியில் உள்ள புறநகரில்  வாடகை அடிபபடையில் வீடொன்றை பெற்று வாழ்ந்து வந்தனர்.இக்குடும்பத்தில் 18 வயது ஆண்   12 வயது பெண் பிள்ளை உட்பட  5 வயது ஆண் பிள்ளையும் உள்ளடங்குகின்றனர்.

இதில் 18 வயது ஆண்  பிள்ளை உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஊடாக கல்வி கற்று  வருகின்றார். இச்சம்பவத்தில் 12 வயதான பெண் பிள்ளையே  பாதிக்கப்பட்டவராவார்.சிறுமியின் தந்தை கடற்தொழில் செய்பவர் ஆவார்.தந்தைக்கு 40 வயது என்பதுடன் தாய்க்கு 36 வயதாகும்.ஆரம்ப காலத்தில் தந்தையுடன் தொழில் உறவில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் முறைகேடான தொடர்புகளை தந்தையின் சம்மதத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

இத்தொடர்புகள் தங்களது வசதியின்மையை காரணம் காட்டி  பொருளாதார நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்த போதிலும் மாளிகைக்காட்டில் இருந்து ஆரம்பமாகி பின்னர் வாடகை வீடு அமைந்துள்ள நிந்தவூர் வீட்டிலும் குறித்த விபச்சாரம்  தொடர்ந்தமை விசாரணையில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தான் குறித்த குடும்பத்தில் இருந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமியும்   ஆபாசப்படம் காண்பிக்கப்பட்டு தனது தந்தை மூலம் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.பின்னர்   ஏனைய சந்தேக நபர்களுக்கும் சிறுமி  பணத்திற்காக விற்கப்பட்டிருந்தார்.இச்செயற்பாடுகள் தாயின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றமை விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.இதன் போது வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடம் இருந்தும் 20 ஆயிரம்  10 ஆயிரம்  2 ஆயிரம்  என பணம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த   தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று   குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் உடனடியாக கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

பின்னர் குறித்த சம்பவத்துடனான  வழக்கு கடந்த தவணையின் போது   சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் இரு தடவை   விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில்  தந்தை  உட்பட 5 சந்தேக நபர்களும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.பின்னர் மற்றுமொரு  சந்தர்ப்பத்தில்  சந்தேக நபர்களான    தந்தை தாய்  தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும்   அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதே வேளை    குறித்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி அந்த 4 சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.