பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் சபரகமுவா மாகாணம், அதேபோல் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் இடையிடையே இடியுடன் கூடிய மழை பெய்யவும், பலத்த மின்னல் தாக்கம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.