, .

பெரியநீலாவனை பிரபா.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் மிகவும் சிறப்பான முறையில்
கொண்டாடப்பட்டது.

காலை வேளையில் உழவர்களுக்கு உன்னதமாக விளங்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி தைப்பொங்கல் தினத்தினை தமிழர்கள் கொண்டாடுவது வழமை. அதன் பின்னர் வழிபாடுகள் முடிந்தவுடன் ஓய்வு நேரத்தினை உல்லாசமாக கழிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கும் மக்கள் செல்வது உண்டு. அந்த வகையில் அண்மைக்காலமாக சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்,
கிழக்கு மாகாணம் களுவாஞ்சிகுடி பெரியகல்லாறு பகுதியில் கடலோடு சங்கமிக்கின்ற முகத்துவாரம் எனப்படுகின்ற பகுதி வெள்ள நீர் ஆற்றை நோக்கி தற்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்தப் பகுதியில் நேற்றைய தினம் தைத்திருநாள் ஒய்வு நேரத்தை பெரும்பலமான மக்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்ததை காணக்கூடியதாக இருந்தது.