இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்!முக்கிய பேச்சுவார்த்தையில் ஆளும் கட்சி அமைச்சர்கள்

''

தற்போதைய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அரசாங்கம் நீண்ட காலம் ஆட்சியில் இருக்காது. அடுத்த ஆண்டு அரசியல் திருப்பமொன்று ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், ஐ.தே.க., எஸ்.ஜே.பி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த ஆண்டு உருவாகும்.இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக […]

முஸ்லிம்கள் மீதான வெறுப்பையே திலீபன் எம்பி கக்கி இருக்கிறார் சாணக்கியன் மீது அல்ல என்கிறார் ஹசன் அலி

''

முஸ்லிம்கள் தொடர்பாக அடிமனதில் கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியையே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் திலீபன் எம். பி கக்கி உள்ளார் என்று சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் திலீபன் எம். பி உரையாற்றியபோது,முஹமட் சாணக்கியன் என்று சாணக்கியன் எம். பியை விளிக்க கையாண்டார். இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நிந்தவூரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய ஹசன் அலி, […]

அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் கிடையாது! – ரிஷாத் பதியுதீன்

''

அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரவு செலவுத் திட்டதை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அக்குறனை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை. இந்நிலையில், வரவு செலவுத் […]

மக்களை அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்: பொலிஸார் வேடிக்கை பார்ப்பதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

''

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொது மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiya Rasamanickam) விசனம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் (Ampitiye Sumanarathana Thero) மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். […]

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமான செயல்! டிலான் பெரேரா

''

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமித்தமை முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார். பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஞானசார தேரர், குழு ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் முட்டாள்தனமான செயல். ஞானசார தேரர் மீது தவறுகள் […]

நாட்டுக்கு பங்களிப்பு செய்யவே கடவுச்சீட்டை பெற வரிசையில் நிற்கின்றனர்: பொதுஜன பெரமுன

''

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இம்முறை கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம் சிறந்த வரவு செலவுத்திட்டம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார். இம்முறை முழுமையான அபிவிருத்தி வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு,தேசம் என்ற வகையில், ஏதோ ஒரு நல்லவழிப் பிறக்க போகும் அடையாளங்களை காணமுடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் […]

மீண்டும் கூட்டுறவு கூப்பன் முறைமை: சமல் ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ள விடயம்

''

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு ஏதேனும் ஓர் வழியில் நிவாரணங்களை வழங்கக்கூடிய பொறிமுறைமை ஒன்று அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் வர்த்தக அமைச்சரே தீர்மானம் எடுக்க வேண்டும், அது எனது துறை […]

அரசின் செயற்பாட்டால் இலங்கை மக்கள் தற்கொலை செய்யும் அபாயம்

''

2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்குக் கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ம் ஆண்டுக்கான வரவு […]

எதுவுமேயில்லை

''

ஹர்ஷ டி சில்வா எம்.பி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் வாழ்க்கைச் செலவைக் குறைக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. வெறும் அரசியல் இலக்கோடு இந்த பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.  பட்ஜட் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்பட்டுள்ளதோடு ஏமாற்றப்பட்டுள்ளனர்.  நிதி மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு பற்றாக்குறையின் முக்கியக் கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வரவு செலவுத் […]

நிதி ஒதுக்கீட்டில்மதங்களுக்கு பாரபட்சம்

''

சித்தார்த்தன் எம்.பி நிதி ஒதுக்கீட்டில் மதங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பௌத்த மதத்திற்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது போல் ஏனைய மதங்களுக்கு நிதி ஒதுக்கியிருக்கலாமென புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறினார்.  பட்ஜட் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும்,உறவுகளை பிரிந்து தவிப்போரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். நிதி ஒதுக்கீடு மாத்திரம் அந்த பிரச்சினையைத் தீர்க்காது. இந்த […]