பாரம்பரிய வீரமுனை தமிழ் கிராமத்தில் வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிப்படைவாத இனவாத கும்பல் எதிர்ப்பு; நீதி மன்றம் நீதி வழங்கும் என நம்புகிறோம் – சிவநேசதுரை சந்திரகாந்தன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாரம்பரிய தமிழ் கிராமங்களில் ஒன்றான வீரமுனையில் ஆலயம் மற்றும் ஊர் பொது மக்கள் இணைந்து வீதியில் வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணி நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது . இதன் போது சில மதவாத, இனவாத அடிப்படைக்கொள்கையுடைய கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தியதால் அங்கு அமைதியின்மை நிலவியது.

குறித்த பணியினை ஆரம்பித்து வைக்க அடிக்கல் நட வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனுக்கு பொலிஸாரினால் நிகழ்வில் பங்கு கொள்ள நீதிமன்றில் தடை உத்தரவை பெற்று பொலிஸார் வழங்கியிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சிவநேசதுரை சந்திர காந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

பாரம்பரிய தமிழ் கிராமத்தில் அந்த மக்கள் ஒரு வளைவு கோபுரத்தை அமைக்க சில அடிப்படைவாத சிந்தனையுடைய கும்பல் இனவாதமாக தடுக்க முயல்வது வேடிக்கையும் ,வேதனையுமான விடயமாகும்.

இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையில் மேலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இவ்வாறான செயல்களுக்கு சில பொலிஸ் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும் திட்டமிட்டு உடந்தையாக இருப்பதை உணரமுடிகிறது.

நீதி மன்றத்திலும் எனக்கு இந் நிகழ்வில் பங்கு கொள்ள தடை உத்தரவை பொலிஸ் பெற்று வாசித்தனர். நீதி மன்ற கட்டளையை மதித்து நான் பங்கு பற்றவில்லை.

நீதி மன்றத்தை நாங்கள் நாடவுள்ளோம் நீதி மன்றம் பக்கச்சார்பின்றி நீதி வழங்கும் எனும் நம்பிக்கை உள்ளது என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…