மருதமுனை நூலக வாசகர் வட்ட பிரதிநிதிகளுடன் முதல்வர் றக்கீப் கலந்துரையாடல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மருதமுனை பொது நூலக வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நூலக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வாசகர்களின் தேவைகள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, ஆசியா பௌண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், நூலகர் ரிஹானா ஹாலித் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 16 மில்லியன் ரூபா நிதி மூலம் நூலக மேல் மாடியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள சமூக வள நிலையத்தை பார்வையிட்ட முதல்வர் அதனை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 30 மில்லியன் ரூபா நிதியில் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கேட்போர் கூட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் கலந்துரையாடியுள்ளதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

By admin