காரைதீவில் திகிலூட்டும் சமுத்திர படகோட்டம்!

விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15) நடாத்திய திகிலூட்டும் சமுத்திர படகோட்டப்போட்டி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது.

காரைதீவுக்கடலில் 10இயந்திரப்படகுகள் பங்குபற்றிய இப்போட்டி புத்தாண்டைக்கொண்டாடும் பார்வையாளர்களுக்கு  கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. இங்கு படகுகள் சமுத்திரத்தில் போட்டியில் பங்கேற்பதையும் பார்வையாளர்கள் ஆவலோடும் வியப்போடும் கண்டுகளிப்பதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா

By admin