மக்கள் மனம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில் கேட்ஸ்- ஏஞ்சலினாவுக்கு முதலிடம்……

அனைத்துலக அளவில், மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து ‘யூகோவ்’ என்ற நிறுவனம்  இணையத்தில் வாக்கெடுப்பில் முதலிடத்தை பில் கேட்ஸும் நடிகை ஏஞ்சலினா ஜோலியும் பிடித்தனர்.

35 நாடுகளில் 37 ஆயிரம் பேரிடம் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் மூலம் மக்களை கவர்ந்த 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் பட்டியலிட்டு அறிவிக்கப்பட்டனர். அவர்களில் ஆண்கள் பிரிவில் மைக்ரோ சோப்ட்  நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2ஆவது இடத்திலும், நடிகர் ஜாக்கி ஜான், சீன அதிபர் ஜின் பிங் ஆகியோர் முறையே 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடம் பிடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்தப் படியாக அமெரிக்க முன்னாள் அதிபர்ஒபாமாவில் மனைவி மிஸ்ஸெல் ஒபாமா மற்றும் ஒப்ரா வின்பிரி ஆகியோர் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர கேளிக்கை மற்றும் பொழுது போக்குத்துறை சேர்ந்தவர்களான டெய்லர் சுவிப்ட், மடோனா, வியூ யிபே மற்றும் கால் கேடட் ஆகியோர் முறையே  4ஆவது, 5ஆவது, 6 ஆவது ஆகிய   இடங்களை பிடித்துள்ளனர்.