பாபர்’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது……..

‘பாபர்’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த ஏவுகணை 700 கிமீ தூரத்தில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மேம்பட்ட வடிவத்தை பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் சோதனை செய்துள்ளது. ‘பாபர் ஆயுத திட்டம் – 1(பி)’ என்ற இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறக்கும் தன்மை கொண்டது. தரை மற்றும் கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனையும் கொண்டது. மேலும் பல்வேறு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஆற்றலும் வாய்ந்தது.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெர்காம், டிஎஸ்மாக் தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள பாபர் ஏவுகணை, ஜிபிஎஸ் வழிகாட்டுதல் இல்லாமலும், துல்லியமாக இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.