சிரியா மீது தொடரும் அமெரிக்கா, இங்கிலாந்து,, பிரான்ஸ் ஆகிய கூட்டுப் படைகளின் தாக்குதல்கள்,பீதியில் உறையும் .உலக நாடுகள் ….அவசரமாக கூடுகிறது இ நா சபை 

சிரியா நாட்டில் தீவிரவாதிகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே கடந்த ஆறு வருடங்களாகத் தொடரும் உல் நாட்டுப் போரில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் . சிரியா ரசாயன தாக்குதல் நடாத்தித்தினால் சிரியா மீது ராணுவ நடவடிக்கை நடத்தப்படும் என்று ஏற்கனவே  எச்சரித்திருந்தார்.

இதற்கு ரஷ்யா, சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீசினால், அதை போர் குற்றமாக ரஷ்யா கருதும். அதன்பிறகு ரஷ்யா – அமெரிக்கா இடையே நேரடி போர் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது தாக்குதலை துவங்கினர். சிரியாவின் ரசாயன் ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
.
இந்த தாக்குதலில் எங்களுக்கு சிறிய சேதங்கள்தான் ஏற்பட்டன என்றும், எங்கள் ராணுவ மையங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று சிரியா தெரிவித்துள்ளது.

ரசாயன தாக்குதலை அழிக்கும் வரை சிரியா மீதான தாக்குதல் நீடிக்கும். சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும். இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்று டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார்.
இதற்கு பதில் தாக்குதலாக சிரியா மற்றும் ரஷ்யா என்ன செய்ய போகிரது என்பது தெரியாமல், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது.

சிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இடையே போர் மூளுவதை தடுக்க ஐநா சபை அவசரமாக கூடுகிறது.

அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.இந்த படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன.

புரட்சி படையினர் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். அவற்றை மீட்பதற்கு சிரியா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.ரஷிய ராணுவம் நேரடியாக அவர்களுடன் சேர்ந்து புரட்சி படையுடன் போரிட்டு வருகிறது. இதன் காரணமாக புரட்சி படையிடம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன.

தலைநகரம் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கூடா என்ற நகரம் புரட்சி படையினரிடம் இருந்தது. அந்த நகரை மீட்பதற்கு சமீப காலமாக சிரியா ராணுவம் கடுமையாக போரிட்டது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கூட்டா பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன்ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்..இதற்கு பதிலடியாக நேற்று சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அமெரிக்க கூட்டுப்படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டாரஸ்,உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டாரஸ் கூறுகையில்,சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷியாவும் பரஸ்பரம் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் நல்ல முடிவெடுப்பதற்காக தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுகருத்தை உருவாக்க வேண்டும் என்றார்.