தேற்றாத்தீவு  புனித யூதா ததேயு   திருத்தலத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது!

-சிந்துஜன்-

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புனித ஸ்தலமாகவும் திருத்தலமாகவும் விளங்கும் தேற்றாத்தீவு  புனித யூதா ததேயு   திருத்தலத்தின் வருடாந்த திருவிழா 06.04.2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று  15 ஆம் திகதி கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது  புனிதரின் திருச்சுரூப பவனி நடைபெற்று   கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.

மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில்    தேற்றாத்தீவு திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்பணி நிர்மல் சூசைராஜ் அவர்களோடு நேற்றைய திருவிழா கோலாகலமாக நடைபெற்றறு   இறைமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இத்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டிருந்தார்கள்.

 

By admin