கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் சிறப்பு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன!

-சிந்துஜன்-

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்று கூடல் ‘ஒருமித்து கல்வி கூடத்தில் ஒன்று படுவோம்’ எனும் தொனிப்பொருளில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற அனைவரையும் ஒன்றாக இணைத்து பாடசாலையில் ஓர் குடும்பமாக ஒன்று கூடும் நிகழ்வு நேற்று 15 ஆம் சிறப்பாக இடம்பெற்றது

பழைய மாணவர்களுக்கான ஒன்று கூடல் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது இதில் தலைவராக பாடசாலை அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு அவர்களும் மீண்டும் செயலாளராக கென்றி அமல்ராஜ், பொருளாளராக திருமதி சீத்தா பத்திரண ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பி.ப 3.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் , பழைய மாணவர்களின் குழந்தைகளுக்கான நிகழ்சிகளுமாக பாடசாலை குடும்ப ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இந்த ஒன்று கூடலின் போது பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்களின் சிறப்பான பல கலை நிகழ்ச்சிகளுடன் அனைவரும் கூடி உண்டு மகிழும் இராப்போஷனமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

        

 

By admin