பாண்டிருப்பு யூத் விளையாட்டுக்கழகத்தின் சித்திரை கொண்டாட்டம்; விளையாட்டு போட்டிகளும் இசைநிகழ்ச்சியும் நேற்று சிறப்பாக நடைபெற்றது!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பாண்டிருப்பு யூத் விளையாட்டுக்கழகத்தினால் சித்திரைக் கொண்டாட்டம்; விளையாட்டுப்போட்டிகளும், இசை நிகழ்சியும் நேற்று (15) சிறப்பாக நடாத்தப்பட்டன.

13 ஆம் திகதி காலை சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றிருந்ததுடன், நேற்று 15 ஆம் திகதி காலை மரதன் ஓட்டப்போட்டியும் நடைபெற்று, மாலை தமிழர் கலாசார பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயமுன்றலில் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழவும் யாழ்ப்பாணம் ஸ்ருதிலயா இசைக்குழுவினரின் மாபெரும் இசை நிகழ்ச்சியும் இரவு ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றிருந்தன.

 

By admin