கல்முனை நியுஸ்டார் கழகத்தால் நடாத்தப்பட்ட படகுப்போட்டி!

கல்முனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 34 ஆவது ஆண்டு பூர்த்தியையும், சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு கல்முனை மாநகரில் 13, 14, 15 ஆகிய ஆகிய தினங்களில் நடாத்திவரும் சித்திரை களியாட்ட நிகழ்வினன் நேற்றைய தினம் 13 காலை மரதன் ஓட்டப்போட்டியும், அதனைத் தொடர்ந்து படகுப்போட்டியும் நடாத்தப்பட்டன.

படகுப்போட்டி கல்முனை கடலில் நேற்று காலை ஒன்பது மனியளவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியினை பெருந்திரளான மக்கள் பார்த்து இரசித்தனர்.

 

நிகழ்வுகள்

13 ஆம் திகதி – காலை 6 மணிக்கு மரதன் ஓட்டம் – காலை 9 மணிக்கு படகு ஓட்டம் – மாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிள் மெல்லோட்டம் ( ஆண்கள் பெண்கள்)

14 ஆம் திகதி மாலை 3 மணிக்கு சிறுவர் களியாட்ட நிகழ்வுகள்

15 ஆம் திகதி காலை 6 மணிக்கு மரதன் ஓட்டம்
15 ஆம் திகதி பி.ப 2 மணிக்கு சித்திரை களியாட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள்
15 ஆம் திகதி மாலை 8 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வும்இ இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெவுள்ளது.

By admin