இடி , மின்னலுடன் கூடிய கால நிலை நிலவும்! எச்சரிக்கையாக இருக்கவும்

சில நாட்களுக்கு பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேற்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இடிமின்னலின்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

By admin