உயர் கல்விக்கான ஒன்றியத்தின் (AAE) வினாவிடை போட்டியின் இறுதிச்சுற்றும், நிகழ்வுகளும் நாளை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில்!

(சிந்துஜன்,பிரதீ)

அம்பாறை மாவட்ட பொறியியல், மருத்துவபீட மாணவர்களை அங்கத்தவர்களாக் கொண்ட உயர் கல்விக்கான ஒன்றியத்தினால் (AAE) இந்த ஆண்டு 2018 உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினாவிடைப் போட்டியின் இறுதிச்சுற்றும்  நிகழ்வும் நாளை 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ( காலை 9 .00 மணிக்கு  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது.

செயலமர்வுகள் முன்னோடிப்பரீட்சைகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வினாவிடைப்போட்டிகள் என கல்வி ஊக்குவிப்பு செயற்பாடுகளை வருடாந்தம் இவ்வமைப்பினால் முன்னெடுத்து வருகின்றனர். ஆறாவது வருடாந்த செயற்பாடுகளில் ஒன்றான உயர்தர மாணவர்களுக்கான வினாவிடைப் போட்டியின் இறுதிச்சுற்றும்  நிகழ்வுகளும் இம்முறை  கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது   இதில் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர்.

By admin