துளிர் கழகத்தின் AVL Trophy  கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பாண்டிருப்பு காந்தி ஜீ கிண்ணத்தை வென்றது!

(ராயு)

கல்முனை துளிர் கழகம் கழக உறுப்பினர்களான அபிஷேக்,வேணு,லோசாந், ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடாத்திய AVL Trophy   கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பாண்டிருப்பு காத்தி ஜீ வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மைதானத்தில் கடந்த  25 ஆம் திகதி ஆரம்பமாகிய
போட்டிகள் 25 ,30,31 01,07,08 ஆகிய திகதிகளில் தொடர்ந்து நடைபெற்றிருந்தன. இச்சுற்றுப்போட்டியில் 32 கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இறுதிப்போட்டிக்கு கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் அணியும், காந்தி ஜீ அணியும் தகுதி பெற்று  நேற்று (8) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாண்டிருப்பு காந்தி ஜீ அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காந்தி ஜீ அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர்  அதற்கு அமைவாக 10 பந்து வீச்சு ஒவர்கள் நிறைவில் 8விக்கட்டுகளை இழந்து 114 ஒட்டங்களை பெற்றனர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருவள்ளுவர் அணி 110 ஒட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆட்டநாயகனாக 13பந்துகளில் 50ஒட்டங்களை பெற்ற செல்வகுமார் தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் வி.பிரபாகரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், பிரதி அதிபர் கலையரசன், சட்டத்தரணி சிவரஞ்சித், விளையாட்டு உத்தியோகத்தர் சுலக்சன் ஆகியோரும்  மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

By admin