தமிழ் இளைஞர் மன்றத்ததால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு!

வாழ்வாதார உதவியாக தமிழ் இளைஞர் மன்றத்தால் நேற்று (8) சில்லறைக் கடைக்கான பொருட்கள் வறுமை நிலையில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைக்கப்ட்டன.

சிறு கடை நடாத்தி வரும் பாண்டிருப்பைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் வாழ்வாதார நிலைமையினை கருத்தில் கொண்டு சுய தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் 26100 ரூபாய் பெறுமதியான கடைக்குரிய பொருட்கள் தமிழ் இளைஞர் மன்ற உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும்; அவ்வாறான குடும்பங்களின் வாழ்வாரதாரங்களை முன்னேற்ற முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து தமிழ் இளைஞர் மன்றத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும், இந்த உதவிகளை வழங்கிய நல் உள்ளங்களுக்கும் நன்றியினையும் இவ் அமைப்பினர் தெரிவித்தனர்.

By admin