பாண்டிருப்பு யூத் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் சித்திரை கொண்டாட்டம்; விளையாட்டுப்போட்டிகளும் இசை நிகழ்ச்சியும்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பாண்டிருப்பு யூத் விளையாட்டுக்கழகத்தினால் சித்திரைக் கொண்டாட்டம் விளையாட்டுப்போட்டிகளும் இசை நிகழ்சியும் நடாத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதியும் 15 ஆம் திகதியும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய முன்னறலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

13 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு சைக்கிள் ஓட்டப்போட்டியும் 15 ஆம் திகதி காலை மரதன் ஓட்டப்போட்டியும் நடைபெற்று 15 ஆம் திகதி 2.30 மணிக்கு தமிழர் கலாசார பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுடன் அன்று மாலை பரிசளிப்பு நிகழ்வும் யாழ் ஸ்ருதிலயா இசைக்குழுவினரின் மாபெரும் இசை நிகழ்சியும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கழகச் செயலாளர் தெரிவித்தார்.

By admin