கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பிரதேசங்களை சுத்தப்படுத்தும் பணி  தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன!

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் ‘ எமது கடற்கரையை பாதுகாப்போம் ‘ என்ற அடிப்படையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நேற்று 8 ம் திகதி ஞாயிற்றுக் சிறப்பாக  முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை 3 கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்து பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதிவரையாக கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டன.

குப்பைகள் பிளாஸ்ரிக், மற்றும் கண்ணாடி போத்தல்களையும் அகற்றி கடற்கரை ஓரங்களை சுத்தம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்பணியில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சுகாதாரப்பிரிவினர், கல்முனை பிரதேச இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக நலன் விரும்பிகள் என பலர்  பங்குபற்றியிருந்தனர்.

இவர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனும் இச்சிரமதானப்பணியில் பங்குபற்றியிரந்தார்.

இப்பணியில் பங்குபற்றிய, பங்களிப்பு செய்த அனைவருக்கும் தமிழ் இளைஞர் சேனை நன்றியினையும் தெரிவித்தனர்.

 

 

By admin