சிவநெறி அறப்பணி மன்றத்தின் 4 ஆம் ஆண்டு நிகழ்வும், அறக்கொடை விழாவும் கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது!

சிவநெறி அறப்பணி மன்றத்தின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வும் அறக்கொடை விழாவும் நேற்று (7.4.2018) சனிக்கிழமை கல்முனையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

சிவநெறி அறப்பணி மன்றத்தின் தலைவர் சைவவித்தகர் யோ.கஜேந்திரா தலைமையில் கல்முனை நால்வர் கோட்டத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் 30 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் 30 குடும்பங்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகளும் வழங்கி  வைக்கப்பட்டதுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், கௌரவிப்பு
நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சேனைக்குடியிருப்பு திரு நீல கண்டர் ஆலய பிரம குரு சிவசிறி மு.நல்லதம்பி குருக்கள் அவர்களும் முதன்மை அதிதியாக இலண்டன் சைவ முன்னேற்ற சங்க அறங்காவலர் சிவத்திரு சு.பாலசிங்கம் அவர்களும், பிரதேச செயலாளர்களான ஜெகதீசன், அதிசயராஜ், ரங்கநாதன் மற்றும் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும் நால்வர் கோட்ட தலைவருமான பரதன் கந்தசாமி, ஊடகவியலாளரும் அதிபருமான பேரின்பராசா, யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஜெயந்திரன், இளைஞர் சேனை தலைவர் பிரதீவன், மற்றும் சிவநெறி அறப்பணி மன்றத்தின் செயலாளர் சரவணபவன், உப செயலாளர் நிதான்சன், பொருளாளர் செல்வக்குமரன், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

-நிதான்-

  

By admin