அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவில் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி மட்டக்களப்பில் ஆரம்பமானது!

(டினேஸ்)

தியாகத் தீபம் அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவில் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு வேபர் மைதானத்தில் இன்று 06 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச்சுற்றுப் போட்டியானது மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள ஏ தரத்திலான 14 பிரபல அணிகள் பங்கபற்றுவதுடன் இப்போட்டியானது 13 போட்டிகள் கொண்ட  இடைவிலகல் போட்டியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றைய ஆரம்ப போட்டியில் யங்கிஸ்டார் கழகம் மற்றும் கடல்மீன்கள் கழகங்கள் போட்டியிடுகின்றன. அந்தவகையில் போட்டியானது சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இதன் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 18.04.2018 ஆம் திகதி குறித்த மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin