சிவநெறி அறப்பணி மன்றத்தின் 4 ஆம் ஆண்டு நிகழ்வும் அறக்கொடை விழாவும் இன்று கல்முனையில்!

சிவநெறி அறப்பணி மன்றத்தின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வும் அறக்கொடை விழாவும் இன்று (7.4.2018) சனிக்கிழமை கல்முனையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வு சிவநெறி அறப்பணி மன்றத்தின் தலைவர் சைவவித்தகர் யோ.கஜேந்திரா தலைமையில் கல்முனை நால்வர் கோட்டத்தில் இன்று பி.ப 2.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந் நிகழ்வின்போது 30 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் 30 குடும்பங்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சேனைக்குடியிருப்பு திரு நீல கண்டர் ஆலய பிரம குரு சிவசிறி மு.நல்லதம்பி குருக்கள் அவர்களும் முதன்மை அதிதியாக இலண்டன் சைவ முன்னேற்ற சங்க அறங்காவலர் சிவத்திரு சு.பாலசிங்கம் அவர்களும் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் விசேட அதிதிகளாக பிரதேச செயலாளர்களும் மற்றும் பல சிறப்பு கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

By admin