கல்முனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தீமிப்பு வைபவம் சற்று முன்னர் முடிவடைந்தது! நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

கல்முனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பக்திப் பரவசமூட்டும் தீ மிதிப்பு வைபவம் சற்று முன்னர் நடந்து முடிந்தது. நூற்றுக்கணக்கான பக்கதர்கள் நேர்த்தி வைத்து தீமிதித்திருந்தனர்.

வருடாந்த உற்சவ சடங்குகள் திருக்கதவு திறத்தலுடன் கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது. . 7ம் நாளான நேற்று  வியாழக்கிழமை தவநிலை ஏறும் நிகழ்வு இடம்பெற்று இன்று தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றது.

கல்முனை ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் நிலத்துக்கு அடியில் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாலயம் இவ்விடத்தில் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin