முற்சக்கர வண்டிகளுக்கு பயண கட்டண மீற்ரர் கட்டாயமாகிறது : 20ஆம் திகதிக்கு பின்னர் வரும் புதிய நடைமுறை!

தரநிர்ணயத்துடன் கூடிய கட்டண மீற்றர் இல்லாத முச்சக்கர வண்டிகளில் வாடகை பயணங்கள் மேற்கொள்வது எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதும் முச்சக்கர வண்டி சங்கங்களின் கோரிக்கைகளுக்கமைய அந்த நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் மீற்றர் இல்லாத முச்சக்கர வண்டிகள் ஹயர் செல்வதை தடை செய்ய நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

By admin