கல்முனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம் நாளை! தமிழ் இளைஞர் ஒன்றியத்தால் இன்று மாபெரும் அன்னதான நிகழ்வு!

கல்முனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 8ம் நாளான நாளை 6 ஆம் தகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு பக்திப்பரவசமூட்டும் தீமிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது.

வருடாந்த உற்சவ சடங்குகள் திருக்கதவு திறத்தலுடன் கடந்த   30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 7ம் நாளான இன்று 5 ஆம் திகதி வியாழக்கிழமை தவநிலை ஏறும் நிகழ்வு இடம்பெற்று நாளை தீ மிதிப்பு வைபவத்துடன் உற்சவம் நிறைவு பெறும்.

இன்றைய தினம் தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் அன்ன தானம் நடைபெறவுள்ளது.

கல்முனை ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் நிலத்துக்கு அடியில் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயம் இவ்விடத்தில் அமையப்பெற்தும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin