பிரதமர் ரணிலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்!

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய பிரதமர்,

“நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம்.

இது தொடர்பாக இன்று  அல்லது நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்டு செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் பிரதமருக்கு ஆதரவாக 122 பேரும் எதிராக 76 பேரும் வாக்களித்திருந்தனர. இந்த வாக்கெடுப்பில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin