மட்டக்களப்பு போக்குவரத்து சபையின் நிலை; அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க தாமதிப்பது ஏன்?

 

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பிராந்திய சபையானது ஏனைய சபைகளுக்கு முன் உதாரணமாக திகழ்வதோடு எம்மவர்கள் பெருமைகொள்ளும் விதத்தில் மிகச் சிறப்பான சேவையினையும் ஆற்றி வந்துள்ளமையையும் நாம் அறிவோம்.

திறமையான நிர்வாகத்தின் கீழ் ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைகளால் பல இலட்சம் ரூபாய்களை இலாமாக ஈட்டிவந்துள்ளது.  அதிகஸ்ட வலயங்களுக்கான கிராமிய பஸ் சேவைகள், மாணவர்களுக்கான விஷேட சேவைகள் அத்துடன் தூர இடங்களுக்கான பிரயாண ஒழுங்குகள் என மக்களின் தேவையறிந்து சேவையாற்றிய எமது மட்டக்களப்பு போக்குவரத்து சபையின் இன்றைய நிலை..?

மட்டக்களப்பு போக்கு வரத்து சபை முகாமையாளராகப் பணியாற்றிய கிரிஷ்னராஜா என்பவர் மீது பொய் குற்றம் சுமத்தி கடந்த 5 மாதங்களாக விசாரணை எனும் போர்வையில் அம்பாரைக்கு மாற்றம் செய்துள்ளனர்.

இதன் பின்னர் பதில் முகாமையாளராக பொறுப்பேற்ற சிறிதரன் என்பவரும் திறமையாக பணியாற்றி வந்தார். இவர் முல்லைத்தீவு மற்றும் கட்டுநாயக்கா போன்ற இடங்களுக்கான புதிய வீதிப் போக்குவரத்துசேவைகளை ஆரம்பித்து இலாபத்துடன் இப்போக்குவரத்து சபையை சிறப்பாக நடாத்தி வந்தார். இது சில ஊழல்வாதிகளுக்கும், இனவாத போக்குடைய ஓரிரு மேலதிகாரிகளுக்கும் வயிற்றெரிச்சலை தூண்டியுள்ளது. ஆதலால் மட்டக்களப்பு போக்குவரத்து சபையை தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பினர். இதற்குத்தடையாக இருந்தவர்களை அப்புறப்படுத்தவும் முயன்றனர்.

குறிப்பாக யுடுஆ சித்திக் எனும் மேலாளரால்  தூர இடங்களுக்கான பிரயாணத்த சேவையில் ஈடுபட்ட கட்டுநாயக்க போன்ற பஸ் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு கல்முனை இ.போ.ச க்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதே போன்று கிராமிய சேவையில் ஈடுபட்ட இன்னும் சில சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெவிக்கப்படுகிறது .

அத்துடன் அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகளுக்கு அவர்களது கடமைகளை செவ்வனே செய்யமுடியாமல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தோடு நேர அட்டவணைகள் மாற்றப்பட்டு மட்டக்களப்பு டிப்போ பஸ்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும்  இ.போ.ச  ஊழியர்களுக்குள் முறண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களை குழுவாக பிரித்து தூண்டி விடப்பட்டும் உள்ளார்கள்.

இவ்வாறு தூண்டி விடப்பட்டதன் பின்னனியே பதில் முகாமையாளர் சிறிதரன் தாக்கப்பட்டமையாகும். இது தொடர்பாக தெரியவருவதாவது…

கடந்த வியாழன் ( 29.03.2018) அன்று  மட்டக்களப்பு – பாவற்கொடிச்சேனைக்குரிய கடைசியாக  செல்லும் இரவு நேர பஸ் இல்லாததனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் உட்பட  தனியார் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்ப வேண்டிய மாணவர்கள், பொது மக்கள் என பலரும் காத்திருந்துள்ளனர்.

ஏற்கனவே பஸ்ஸிற்காக காத்திருக்கும் பிரயாணிகளை ஏற்றிசெல்வதில்லை என மக்கள் பல முறை முறைப்பாடு  செய்திருந்தமையால். குறித்த பிரதி முகாமையாளர் நேரடியாக பஸ் நிலையத்திற்கு சமூகமளித்து நேரப்பதிவாளரிடம், முனைக்காட்டிற்குச் செல்வதற்காக தரித்து நின்ற NA -1141  இலக்க பஸ் வண்டியை பாவற்கொடிச்சேனைக்கு அனுப்புமாறு பணித்துள்ளார். இதை நேரப்பதிவாளர் குறித்த பஸ்ஸின் சாரதியான திருச்செல்வம் என்பவரிடம் கூற அவர் முடியாது என கூறிக்கொண்டே காரியாலயத்துக்குள் நுளைந்து பிரதி முகாமையாளர் எழுதிக் கொண்டிருந்த துண்டைப் பறித்து அவரை சாரமாரியாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பிரதி முகாமையாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகின்றார் .

இது தொடர்பில்  மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் ஐந்து நாட்களாகியும் இதுவரை சாரதியான திருச்செல்வம் என்பவர் கைது செய்யப்படவில்லை. அத்துடன் உயர் அதிகாரியொருவர் தாக்கப்பட்டும் தாக்கியவருக்கு எதிராக இ.போ.சபையின் நிர்வாகமும் எதுவித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கடந்த 4 நாட்களாக மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையம் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இருண்டு கிடக்கிறது. இதுவரை பொறுப்புள்ளவர்கள் யாரும் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

 

ஆக.,

இனவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் அதிகாரம் வழங்கி அவர்களுக்குத் துணைபோவதுதான் உயர் மட்ட அதிகாரிகளினதுமர, அரசியல்வாதிகளினதும் பணியா.? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

By admin