தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை கல்முனை பிரதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது!

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் ‘ எமது கடற்கரையை பாதுகாப்போம் ‘ என்ற அடிப்படையில்  கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி எதிர்வரும் 8 ம் திகதி ஞாயிற்றுக் முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்முனை 3 கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக காலை 6.30 மணிக்கு ஆரம்பித்து பாண்டிருப்பு சிவன் ஆலயம்வரையான கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி நடைபெறவுள்ளதால் இதில் கல்முனை பிரதேச இளைஞர்களையும் இந்த பணியில் பங்கெடுக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  தமிழ் இளைஞர் சேனை அழைக்கின்றனர்.

 

 

By admin