9ஏ பெற்ற சாதனை மாணவி சாஹித்யாவை வலயக் கல்விப் பணிப்பாளர் நஜீம் நேரில்சென்றுபாராட்டு!
(காரைதீவு நிருபர் சகா)
 
நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் இம்முறை கிடைக்கப்பெற்ற க.பொ.த.சா.த.பரீட்சைப்பெறுபேற்றின்படி  9ஏ சித்திபெற்ற மாணவி வன்னியசிங்கம் சாஹித்யாவை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் நேரில் சென்றுப்பாராட்டினார்.
வித்தியாலய அதிபர் நா.பிரபாகர் தலைமையில் திடீரென ஏற்பாடுசெய்யப்பட்டு இடம்பெற்ற நிகழ்வில் 9ஏ பெற்ற சாஹித்யாவுடன் அடுத்தடுத்த பெறுபேற்றைப்பெற்ற 4மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் வன்னியசிங்கம் சஜாந்த். இவர் 4ஏ 2பி 3சி பெற்றிருந்தார். அவரும் 9ஏ பெற்ற சாதனையாளர் சாஹித்யாவும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை வன்னியசிங்கம் அதேபாடசாலையில் 30வருடகால சேவையுடைய சிரேஸ்ட்ட ஆசிரியராவார். தாயார் கலைமகள் வித்தியாலய ஆசிரியையாவார்.
பணிப்பாளர் நஜீமுடன் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்துவும் பிரசன்னமாயிருந்தார்.
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் அங்குவாழ்த்துகையில்:
சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளிப்பிரதேசத்தில் இருவர் 9ஏ பெற்றுச்சாதனை படைத்துள்ளனர். ஒருவர் கலைமகள் வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவன் கோபுராஜ் மற்றவர் உங்கள் பாடசாலை மாணவி சாஹித்யா. இருவரையும் எமது வலயம் பாராட்டுகின்றது.
 
இவர்கள் இருவரும் இருவேறு இரட்டையர்கள். இதிலுள்ள விசேடம் என்னவென்றால் இவ்விருவரதும் சகோதரர்களும் அதேபாடசாயில் திறமைச்சித்திபெற்றுச்சாதனைபடைத்துள்ளனர்.  பாராட்டுக்கள்.
நாவிதன்வெளியில் ஏலவே ஒரு இரட்டைச்சகோதரர்கள் றாணமடு இந்துவில் சாதனை படைத்ததை மறக்கவில்லை.
பின்தங்கிய பிரதேசத்து உங்களது இந்தச்சாதனை பலமடங்கு 9ஏக்களை நிகர்த்ததாகும். வாழ்த்துக்கள் என்றார்.

By admin