(டினேஸ்)

காத்தான்குடி நகரசபையுடன் கல்லடி மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தை இணைப்பது தொடர்பிலான நகரசபை முன்மொழிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்று கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபையுடன் கல்லடி மஞ்சந்தொடுவாய் பிரதேசங்களை இணைத்து காத்தான்குடி நகரசபை மற்றும் பிரதேச சபை அமைப்பதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கல்லடி பிரதேசத்தை தனியான நகரசபையாக மாற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அணியின் தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டவர்கள் எங்களை காத்தான்குடியுடன் இணைக்காதீர்கள்இ தமிழரின் பாரம்பரியத்தை அழிக்காதீர்கள்இ நில நிர்வாக ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்இ எமக்குத் தனியான நகரசபை வேண்டும்இ நாங்கள் பொறுமைசாலிகள் சோதிக்காதீர்கள்இ வடக்கு கிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்பவர்களோடு தமிழர்கள் எவ்வாறு இணைவதுஇ பிரிக்காதே பிரிக்காதே தமிழர்களின் பிரதேசத்தைப் பிரிக்காதேஇ தமிழ்த் தலைவரின் ஆளுமை வேண்டும்இ தமிழர்களை மீண்டும் மீண்டும் வதைக்காதேஇ தமிழர்கள் இனவாதிகள் அல்ல எங்களது அதிகாரங்களையே கேட்கின்றோம் போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வரை ஊர்வலமாகச் சென்று அங்கிருந்து மீண்டும் சிவானந்தா மைதானத்தை வந்தடைந்ததுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

By admin