நாவிதன்வெளி பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி!

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அம்பாறை மாவட்டத்தின் உள்ள நாவிதன்வெளி பிரதேச சபையை பெறும்பான்மை வாக்குகள் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது.

அந்தவகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரீ.கலையரசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஏ.எம்.ஏ சமட் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபையின் கன்னி  இன்று திங்கட்கிழமை காலை நாவிதன்வெளி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் பிரதேச சபையின் செயலாளர் எம்..ராமக்குட்டி தலைமையில் நடைபெற்றது.

 

தமிழரசுக் கட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினருமாக மொத்தமாக 08 உறுப்பினர்களைக் கொண்டு இந்த சபை அமைக்கப்பட்டுள்ளது.

தபகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர், பிரதி தவிசாளர்களது தெரிவுகள் நடைபெற்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி தேர்தல் ஆணையாளர் சலீம் உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

By admin