கல்முனை மாநகரசபை மேயராக சட்டத்தரணி றகீப் தெரிவு!
பிரதி மேயராக கணேஸ்: சாய்ந்தமருது சுயேச்சை வரவில்லை!
(காரைதீவு  நிருபர் சகா)
 
கல்முனை மாநகரசபையின் மேயராக ஜக்கியதேசியகட்சி  உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.றக்கீப்  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரதி மேயராக  தமிழர் விடுதலைக்கூட்டணியைச்சேர்ந்த காத்தமுத்து கணேஸ் தெரிவாகியுள்ளார்.
இச்சபைக்கான முதல் அமர்வு (2) திங்கட்கிழமை மாலை  2..45மணிக்கு சபாமண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
மேயர்வேட்பாளர்களாக ஜ.தே.கட்சி உறுப்பினர் சட்டத்தரணி றக்கீப்பினதும்  த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் குலசேகரம் மகேந்திரனினதும்  பெயர்கள் முன்மொழியப்பட்டன.
பகிரங்க வாக்கெடுப்பின்போது றக்கீப்பிற்கு   22வாக்குகளும் மகேந்திரனுக்கு  07வாக்குகளும் கிடைத்தது.
அதன்படி சட்டத்தரணி றக்கீப் மேயரானார்.
பிரதிமேயர்  தெரிவுக்கு த.வி.கூட்டணியின் காத்தமுத்து கணேஸ் த.தே.கூட்டமைப்பின் கே.சிவலிங்கம் அ.அ.ம.காங்கிரஸின் முபீத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
வாக்கெடுப்பில் கணேஸ் 15வாக்குகளையும் சிவலிங்கம் முபீத் ஆகியோர் தலா 7வாக்குகளையும் பெற்றனர். அதன்படி கணேஸ் பிரதிமேயரானார்.
41உறுப்பினர்களைக்கொண்ட கல்முனைமாநகரசபை முதல் மர்விற்க 31பேர் கலந்து கொண்டனர். சாய்ந்தமருது சுயேச்சைஅணியின் 09பேரும் தேசியகாங்கிரஸ் உறுப்பினரொருவரும் சபைக்கு வரவில்லை.
மீதி 31பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.
அமர்வின் இடையில் மின்சாரம் சிலநிமிடங்கள் தடைபட்டது. பார்வையாளர்களின் ஆரவாரம் வெடிச்சத்தங்களுக்கு மத்தியில் அமர்வு ஒன்றரைமணிநேரம் இடம்பெற்று முடிவுற்றது.
பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரீப்சம்சுதீன் காரைதீவு பிரதேசபை தவிசாளர் ஜெயசிறில் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

By admin