கல்முனை மாநகரசபைக்காக மேயராக முஸ்லிம் காங்கரஸ்  ஏ.எம்.எம். றக்கீப் பிரதி மேயராக த.வி.கூ காத்தமுத்து கணேஸ் தெரிவு!

கல்முனை மாநகர சபைக்கான மேயர் பிரதி மேயர் தெரிவுக்கான முதல் அமர்வு சற்று முன்னர் நடந்து முடிந்துள்ளது. இதில் மேயராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.எம்  றக்கீப் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த காத்தமுத்து கணேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

வாக்கெடுப்பில் 31 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் சாய்ந்தமருது சுயேட்சை உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து கலந்து கொள்ளவில்லை.  இதில் மேயருக்காக த.தே.கூட்டமைப்பில் இருந்து கென்றி மகேந்திரன் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து றக்கீப்   ஆகியோர் போட்டியிட்டிருந்தார்கள்.

இதில் கென்றிமகேந்திரன் அவர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏழு பேர் வாக்களித்திருந்தார்கள் றக்கீப் அவர்களுக்கு 22 வாக்குகள் கிடைதிருந்தது பிரதி மேயருக்கான பெயர்களாக த.தே.கூட்டமைப்பில் இருந்து சிவலிங்கம் த.வி.கூட்டணியில் இருந்து காத்தமுத்து கணேஸ் மக்கள் காங்கிரசில் இருந்து முபித் ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது இதில் காத்தமுத்து கணேஸ் 14 வாக்ககளும் சிவலிங்கம்  ஏழு வாக்குகளும் முபித் ஏழு வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இந்த போட்டியில் மேயருக்காக போட்டியிட்ட கென்றி மகேந்திரன் அவர்களுக்கு ததே..கூட்டமைப்பு சேர்ந்த தமிழ் உறுப்பினர்கள்  வாக்களிததிருந்தார்கள் அதேவேளை மேயராக தெரிவு செய்யப்பட்ட றக்கீப் அவர்களுக்கு சில தமிழ் உறுப்பினர்களும் வாக்களிததிருந்தார்கள் இதில் த.வி.கூட்டணி உறுப்பினர் செல்வா யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தார். பிரதி மேராக தெரிவு செய்யப்பட்ட காத்தமுத்து கணேசுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் வாக்களித்ததுள்ளார்கள்.

By admin