4ஆம் திகதிக்கு பின் அரசாங்கத்தில் பாரிய மாற்றம்!

எதிர்வரும் 4ஆம் திகதிக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெற வேண்டிய கட்டாய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்றாலோ அல்லது வெற்றிப் பெற்றாலோ எந்த வழியிலாவது அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளது.
குறிப்பாக 4ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் தோல்வியடைந்தாலோ அல்லது அதற்கு முன்னர் அவர் பதவி விலகினாலோ புதிய பிரதமர் ஒருவர் பதவியேற்பார் என்பதுடன் அமைச்சரவையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிப் பெற்று ரணில் விக்கிரமசிங்க அந்த பதவியில் தொடர்வராக இருந்தாலும் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழவுள்ளது. தற்போதைய பிரதமர் பதவி விலகாது நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிப் பெறுவாராக இருந்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் , இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவொன்று அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சி பக்கம் செல்லும் நிலைமை ஏற்படும். இதன்படி அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

-சமகளம்-

By admin