சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் ”வியாகுல பிரசங்கம்” இறு வெட்டு வெளியிடப்பட்டது!

(சிந்துஜன்)

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலமானது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கே பல்லாண்டு காலமாய் இயேசுவினுடைய வாழ்க்கையினை பிரதிபலிக்கும் பாஸ்கா நாடகம் நிகழ்த்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பாஸ்காவின் முக்கியத்துவம்வாய்ந்த  வியாகுல பிரசங்கம்,  சொறிக்கல்முனை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் முயற்சியில், கிராமத்தோரின் குரலோசையுடன், ஒலிவடிவம் பெற்ற  ”வியாகுல பிரசங்கம்’ இறுவெட்டு , புனித வெள்ளி மாலை 7 மணியளவில் , கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால், பங்குத்தந்தை இக்னேசியஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட, பங்குத்தந்தையால் அனைவருக்கும் இறுவெட்டானது  வழங்கப்பட்டு வெளியிடப்பட்டது.

By admin