கல்முனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது தீமிதிப்பு 6 ஆம் திகதி!

கல்முனை மாநகரில் அலைகடல் அருகே  அடியவருக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கல்முனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவ சடங்குகள் திருக்கதவு திறத்தலுடன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

எட்டாம் நாளான  எதிர்வரும் 06.04.2018 வெள்ளிக்கிழமை இந்து சமுத்திரத்தில் நீராடலை தொடர்ந்து தீ மிதிப்பு வைபவமும் இடம் பெற்று உற்சவம் இனிதே நிறைவுபெறும்

5ம் நாளான 03 ஆம் திகதி செவ்வாய் கிழமை அம்மன் ஊர்வலம் வருதலும்,

6ம் நாளான 4 ஆம் திகதி புதன்கிழமை அம்மன் மடிப்பிச்சை எடுத்தல் நிகழ்வும்,

7ம் நாளான 5 ஆம் திகதி  வியாழக்கிழமை  தவநிலை ஏறுதலும்,

8ம் நாள் 6 ஆம் தகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு பக்திப்பரவசமூட்டும் தீமிதிப்பு வைபவமும்  இடம்பெறும்.

கல்முனை ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் நிலத்துக்கு அடியில் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயம் இவ்விடத்தில் அமையப்பெற்தும் குறிப்பிடத்தக்கதாகும்.

-தனுஸ்கரன்-

By admin