முகமாலையில் அன்பே சிவம் அமைப்பால் அமைக்கப்படவுள்ள சிவபுரம் வளாகத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!

அன்பே சிவம் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ் சங்கத்தினால் முகமாலையில் அமைக்கப்படவுள்ள சிவபுரம் வளாகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று 30 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். எட்டு ஏக்கர் காணியில் 300 மில்லியன் ரூபாய் பெறுமதில் இந்த வளாகம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin