கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களின் வழிநடத்தலில் இருதயவியல் வைத்தியநிபுணர்  நௌசாட் அலி அவர்களினால் இருதய நோயை பராமரித்தல்ஃ தடுத்தல் பற்றிய சிறப்பு விரிவுரை வைத்தியசாலையின் சேவையாளர்களுக்கு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகஸ்தர்கள் துணைவைத்திய உத்தியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

“இருதய நோய்” இனங்காணலுக்கான பல நுட்பங்களுடன் பராமரிப்பு என பல விடயங்கள் விளக்கப்பட்டதுடன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தையும் இருதயவியல் வைத்திய நிபுணர் நௌசாட் அலி அவர்கள் வழங்கினார்.

மேலும் உணவுப்பழக்கவழக்க முறைகள் மருந்துகளின் பாவனை என்பவற்றுடன் எளிமையானதும் மிக அவசியமானதுமான உடற்பயிற்சியாக வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிட நடைப்பயிற்சி மிகச்சிறந்தது எனவும் இதையே நானும் பரிந்துரை செய்கிறேன் என கேள்விகளுக்கான பதிலளிப்பில் கருத்து தெரிவித்தார்.

By admin