பெருந்திரளான பக்தர்கள் கூடி வடம் இழுக்க சந்தான ஈஸ்வரர் கல்முனை மாநகரில் தேரில் வலம் வந்தார்!

கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் (சிவன்) ஆலய பிரம்மோற்சவ விழாவின் தேர்த்திருவிழா நேற்று 30.03.2018 வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கூடி வடம் இழுக்க சந்தான ஈஸ்வரர் தேரிலே கல்முனை மாநகரில் வலம் வந்தார். நேற்றைய தினம் கல்முனை மாநகரம் கோலாகலமாக காட்சியளித்தது.

வருடாந்த உற்சவம் கடந்த 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நேற்று தேர்பவனி நடைபெற்றது இன்று 31 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

புகைப்படங்கள் ஹரி

By admin