25வருடகால பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக 9ஏ  பெற்று கோபுராஜ் சாதனை:
நாவிதன்வெளியில் இரு மாணவர்கள் கோபுராஜ் சாஹித்யா 9ஏ சாதனை!
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம் நேரில் சென்று பாராட்டினார்!
(காரைதீவு  நிருபர் சகா)
 

 வெளியான க.பொ.த.  சாதாரணதரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்தில் நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள  வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இரட்டைச் சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்தார்.

அதிகஷ்டப் பாடசாலையான  வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் வேப்பையடியைச் சேர்ந்த திருச்செல்வம் கோபுராஜ்  9ஏ சித்தியும் திருச்செல்வம் கோபிநாத் 8 ஏ பி சித்தியும் பெற்று வரலாற்றுச் சாதனை  படைத்துள்ளார்.

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் 25வருடகால வரலாற்றில் முதற்றடவையாக கோபுராஜ் 9ஏ சித்திபெற்று வரலாறு படைத்துள்ளார்.

இவர்களை  சம்மாந்துறை கல்விவலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் பாடசாலைக்கு நேற்று வியாழக்கிழமை காலை வருகைதந்து பாராட்டியதுடன் அம்மாணவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கிவைத்தார்.அவரோடு நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இதேவேளை நாவிதன்வெளிக்கோட்டத்தில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவி வன்னியசிங்கம் சாஹித்யா 9ஏ சித்திபெற்றுச் சாதனைபடைத்தள்ளார் என அதிபர் நா.பிரபாகர் தெரிவித்தார்.

By admin