கல்முனை வலயத்தில் 103 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி!  கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் அதிகமான மாணவர்களுக்கு ஏசித்தி பெற்றுள்ளார்கள்.

கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது இதில் கல்முனை கல்வி வலயத்தில் 103 மாணவர்கள் சகல பாடத்திலிலும் ஏ சித்தி பெற்றுள்ளார்கள்.

கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 40 மாணவர்களும், கல்முனை தமிழ் கோட்டத்தில் 31 மாணவர்களும், காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12 மாணவர்களும், சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர் .

கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 25 மாணவர்களும் 9ஏ சித்தி பெற்றுள்ளனர் .

கல்முனை வலயத்தில் அதிகமான மாணவர்கள் 9 ஏ சித்திகளைப்பெற்ற பாடசாலையாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை திகழ்கிறது. கல்முனை பற்றிமாவில் 26மாணவர் 9ஏ சித்திகளையும், 20மாணவர் 8ஏ பி சித்திகளையும் பெற்றுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

By admin