பேஸ்புக்’பயன்பாட்டாளர்களின் தகவல்கள் பாதுகாக்க புதிய நடவடிக்கை 

 

அண்மையில் சமூக வலைத்தள ‘பேஸ்புக்’பயன்பாட்டாளர்களின் தகவல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டு இருந்ததாக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளத்தைத் தொடர்ந்து பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தது தெரிந்ததே

.இந்த தகவல் கசிந்த காரணத்தால் பேஸ்புக்’ நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளன. மேலும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.13 லட்சம் கோடி) வீழ்ச்சி அடைந்தது.

இதையடுத்து ‘பேஸ்புக்’ நிறுவனம், உபயோகிப்பாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ‘பேஸ்புக்’ தகவல்கள் மேலாண்மை எளிதாகும்; அமைப்பு மெனு மறுவடிவமைப்பு செய்யப்படும்; உபயோகிப்பாளர்கள் தங்கள் தகவல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

, இதற்காக பேஸ்புக்கில் தனி ‘செட்டிங்’ ஏற்படுத்தப்படும் எனவும் இதன் தலைமை அதிகாரி எரின் ஈகனும்,. துணை ஜெனரல் கவுன்சில் ஆஷில் பெரிங்கரும் பேஸ்புக் பிளாக்கில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, புதிய ‘பிரைவேசி ஷார்ட்கட்ஸ் மெனு’ ஒன்றை ‘பேஸ்புக்’ அறிமுகம் செய்யும். இதைக்கொண்டு, உபயோகிப்பாளர்கள் தங்கள் ‘பேஸ்புக்’ பக்கத்தின் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்; அவர்களது தகவல்களை யார், யார் பார்க்கிறார்கள், செயல்களை யார், யார் காண்கிறார்கள் என்பதை கண்டு நிர்வகிக்க முடியும். அத்துடன் அவர்கள் பார்க்கிற விளம்பரங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று ‘பேஸ்புக்’ கூறுகிறது
இதுகுறித்து இந்திய பத்திரிகையாளர்கள் பலரின் கேள்விகளுக்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் விசில் ப்ளோவர்’ கிறிஸ்டோபர் தனது டுவிட்டரில் பதில் அளித்தபோது
இந்திய அரசியல் கட்சிகளுக்காகவும் நாங்கள் வேலை செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கும் வேலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இன்னும் ஒருசில கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக கூறவில்லை என்றும் அவ்வாறு கூறினால் பெரும் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

 

.