பாக்கிஸ்தான் பிரதமர் அப்பாஸி வாஷிங்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை……

தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு சுகவீனமுற்ற சகோதரியைப் பார்க்க அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி அமெரிக்கா வாஷிங்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளினால் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது .

விமானத்தில் சென்ற அவர், வாஷிங்டன் விமான நிலையத்தில் சாதாரண பயணிகளை போல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அப்பாஸி ஒரு கையில் பெட்டி, ஒரு கையில் கோட்டுடன் பாதுகாப்பு சோதனையில் இருந்து வெளியே வரும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘இந்த நடவடிக்கை பாகிஸ்தானை அவமதிக்கும் செயலாகும். அப்பாஸி ஒரு நாட்டின் பிரதமர். அவரிடம் ராஜ்ய ரீதியிலான பாஸ்போர்ட் உள்ளது. அவர் ஒரு நாட்டின் பிரதிநிதி. 22 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும்போது அவருக்கென்று மரியாதை உள்ளது. பாகிஸ்தான் அவமானப்படுத்தப்பட்டு உள்ளது’ என்று பாகிஸ்தான் ஊடகங்கள் சாடியுள்ளன.
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறது என்ற குற்றச்ச்சாட்டு அமெரிக்காவினால் பாகிஸ்தானுக்கு சுமத்தப் படும்நிலையில் இந்த விவகாரம் பாகிஸ்தானில் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது