கல்முனை மாநகர் சிவன் ஆலய தேர்பவனி நாளை வெள்ளிக்கிழமை!

கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் (சிவன்) ஆலய பிரம்மோற்சவ விழாவின் தேர்த்திருவிழா நாளை 30.03.2018 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.  நாளை காலை 6 மணியளவில்  விஷேட பூசையை தொடர்ந்து தேர்  ஆலயத்திலிருந்து புறப்பட்டு    நகர் வலம் சென்று ஆலயத்தை வந்தடையும்.

பக்தர்கள் கூடி வடம் இழுக்க சந்தான ஈஸ்வரர் தேரில் பவனிவரும்  நிகழ்வால்  கல்முனை மாநகரே மிகவும் கோலாகலமாக காட்சியளிக்கும்.

வருடாந்த உற்சவம் கடந்த 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது நாளை தேர்பவனியும் நடைபெற்று நாளை மறுதினம் 31 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

By admin