சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலாநந்தரின் 126வது ஜனனதினவிழா!

சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலாநந்தரின் 126வது ஜனனதினவிழா!
(காரைதீவு  நிருபர் சகா)

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின்  126வது
ஜனனதினவிழா நேற்று  (27) செவ்வாய்க்கிழமை காரைதீவில் ஊர்வலத்துடன்
சிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றமும்  பொதுமக்களும் இணைந்து
இவ்ஏற்பாட்டைச்செய்திருந்தது.

பிரதம அதிதியாக பிபிசி சிரேஸ்ட ஊடகவியலாளர் பூ.சீவகன்  காரைதீவு பிரதேச
செயலாளர் க.லவநாதன் திருக்கோவில் பிரதேசசசெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட
பலர் கலந்துசிறப்பித்தனர்.

காலையில் காரைதீவு விபுலாநந்த சதுக்கத்திலுள்ள அடிகளாரின் சிலைக்கு
மலர்மாலை அணிவித்தலுடன் ரதங்களின் ஊர்வலம் பாடசாலை மாணவர்களின்
பங்குபற்றுதலோடு பிரதானவீதியூடாக நடைபெற்றது.

ஊர்வலம் விபுலாநந்த மணிமண்டபத்தையடைந்ததும் அங்குள்ள சுவாமியின்
இல்லத்தில் விசேட பூஜை ஆராதனை திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்துதல்
தொடர்ந்து மணிமண்டபத்தில் சிறப்புநிகழ்வு நடைபெற்றது.

பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
சிறப்புச்சொற்பொழிவை விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.
மகிழ்வுரையை செயலாளர் கே.ஜெயராஜி நிகழ்த்தினார்.

By admin